1. Home
  2. தமிழ்நாடு

ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு.பங்காரு அடிகளார் மறைவிற்கு வானதி ஸ்ரீனிவாசன் இரங்கல்..!

1

மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களும் பெண்கள் வழிபாடு செய்யலாம் என்று நடைமுறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தவர்.

அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். பங்காரு அடிகளாரை பின்பற்றும் பக்தர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி 15 நாடுகளில் உள்ளனர். அவர்களால் 'அம்மா' என்று அன்போடு அழைப்பட்டு வந்தார்.இவரது ஆன்மீகச் சேவையைப் பாராட்டி கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. 

இவர், கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை மற்றும் வீட்டிலிருந்தபடியும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்பொழுது அவர் மாரடைப்பின் காரணமாக தனது 82வது வயதில் இன்று (அக்டோபர் 19ம் தேதி) காலமானார்.

இவரது மறைவிற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் திரு.பங்காரு அடிகளார் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய அன்னை ஆதிபராசக்தியை பிரார்த்திக்கிறேன்.   

ஓம் ஷாந்தி 

என பதிவித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like