கஞ்சா போதையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல் - வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்..!

நெல்லை மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் குளித்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் இரண்டு இளைஞர்களையும் கொடூரமாக தாக்கி அவர்களிடம் இருந்த செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளது.
மேலும் கஞ்சா போதையில் இருந்த அந்த கும்பல் இளைஞரக்ளிடம் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என கேட்டுள்ளனர். பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிந்ததும் அவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. மாலை முதல் இரவு வரை சித்ரவைதை செய்த அந்த கும்பல், இளைஞர்களிடம் இருந்து 5 ஆயிரம் பணம், செல்போன், வெள்ளி சங்கிலி ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்கள்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களையும் மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இரண்டு இளைஞர்களும் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் இந்த கொடூர தாக்குதலுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் அவரது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தளத்தில் அவரது பதிவில்,தமிழகத்தில் போதை பொருட்கள் கிடைப்பது எளிதாகிவிட்டதால் குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
நெல்லையில் கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை நிர்வாணப்படுத்தி மிககொடூரமாக தாக்கி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எனது கடும் கண்டங்களை தெரிவித்து கொள்கிறேன்.திமுக அரசு பொறுப்பேற்றது முதல் சாதிய ரீதியிலான தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதை நெல்லையில் நடந்த சம்பவம் நிரூபித்துள்ளது.இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பதிவிட்டுள்ளார்.