நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாளுக்கு வானதி ஸ்ரீனிவாசன் வாழ்த்து..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 57 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சிவகங்கை மாவட்டம் அரனையூர் என்ற கிராமத்தில் 1966 ஆம் ஆண்டு பிறந்த சீமான் இளங்கலை பொருளாதாரம் பட்டப்படிப்பை முடித்தவர் . இவர் 1991 ஆம் ஆண்டு சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்தார் . சினிமாவில் பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி மற்றும் வாழ்த்துகள் போன்ற திரைப்படங்களை இவர் இயக்கினார் .
பின்னர் மாயாண்டி குடும்பத்தார் , பள்ளிக்கூடம் உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் தனி இடம் பிடித்தார். இதைத்தொடர்ந்து அரசியல் பக்கம் திரும்பிய சீமான் நாம் தமிழர் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தனியாக நின்று களம் கண்டு வருகிறார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் இன்று பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. சீமான் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். சகோதரர் திரு.சீமான் அவர்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்
இன்று பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. @Seeman4TN அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
— Vanathi Srinivasan (@VanathiBJP) November 8, 2023
சகோதரர் திரு.சீமான் அவர்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் pic.twitter.com/nck2w8kTxq