இலவச சானிடரி நாப்கின் இயந்திரத்தை வழங்கிய வானதி சீனிவாசன்..!

மாதவிடாய் காலத்தில் பெண்கள் கண்டிப்பாக சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டுமென்று பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும் பிரச்சாரம் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கோவை மக்கள் சேவை மையம் நடத்தும் 'இதம் திட்டம்' எனும் இளம் பெண்களுக்கான இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரம் துவக்க விழா பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இலவசமாக சானிட்டரி நாப்கின் பெறுவதற்கான அட்டையை மகளிருக்கு வழங்கி சேவையை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில், 'கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை நிறுவும் பணிகளை துவங்கியுள்ளோம்.
வருவாய் குறைந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர் இருக்கின்ற பகுதிகளில் இந்த இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளது. இதன் வாயிலாக ஒரு இயந்திரத்தில் 150 பெண்கள் பயன்படும் வகையில் எலக்ட்ரானிக் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை இந்த இயந்திரத்தில் அந்த கார்டு போட்டால் எட்டு நாப்கின் பேடுகள் இருக்கக்கூடிய பேக்கை எடுக்க முடியும். முற்றிலுமாக இலவசமாக இந்த சேவையை நாங்கள் வழங்குகிறோம் என்றார்.
இதற்கு முன்பாகவே இதம் என்கிற திட்டத்தில் நான்காயிரம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் வீட்டிற்கு சென்று சானிட்டரி நாப்கின் வழங்கி வருகிறோம். பாஜக நிர்வாகிகள் மற்றும் மக்கள் சேவை மையம் தன்னார்வ தொண்டர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் இந்த சேவையை செய்து வருகின்றனர் என்றார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "வயது பூர்த்தியான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பெண்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் "இதம்" திட்டத்தின் தொடங்கினோம். இதன் மூலம் இலவச சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரத்தை என் தொகுதி மக்களுக்காக என் அலுவலுகத்தில் (கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில்) துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு இதம் ATM அட்டையை வழங்கினேன். தாய்-சேய் நலனை மேம்படுத்த வளர் இளம் பெண்களிடையே சுகாதாரம் மற்றும் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது மிகவும் அவசியம். இது போன்ற சுகாதார விழிப்புணர்வு எதிர்காலத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள் மற்றும் கருவுறுதல் தடைபடுவதை குறைக்க வழி வகுக்கும் என பதிவிட்டுள்ளார்
வயது பூர்த்தியான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பெண்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் "இதம்" திட்டத்தின் தொடங்கினோம். இதன் மூலம் இலவச சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரத்தை என் தொகுதி மக்களுக்காக என் அலுவலுகத்தில் (கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி… pic.twitter.com/lWu0IeWoG4
— Vanathi Srinivasan (@VanathiBJP) November 9, 2023
வயது பூர்த்தியான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பெண்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் "இதம்" திட்டத்தின் தொடங்கினோம். இதன் மூலம் இலவச சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரத்தை என் தொகுதி மக்களுக்காக என் அலுவலுகத்தில் (கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி… pic.twitter.com/lWu0IeWoG4
— Vanathi Srinivasan (@VanathiBJP) November 9, 2023