1. Home
  2. தமிழ்நாடு

நெல்லை மாவட்ட பாஜக இளைஞரணி நிர்வாகி வெட்டி படுகொலை : வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்..!

1

நெல்லை பாளையங்கோட்டை அடுத்த மூளிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்(34). இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். நேற்றைய தினம் இரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஜெகன் அவரது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்த பாளையங்கால்வாய் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சூழ்ந்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை உதவி ஆணையாளர் பிரதீப் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலைக்கான காரணம் தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன், நெல்லை மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் ஜெகன் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியும் மனவருத்தமும் அடைந்தேன். தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொலை மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கிறது! திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளதையே இது காட்டுகிறது! காவல்துறை விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது  செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு காக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.


 

null


 

Trending News

Latest News

You May Like