காதலர் தினம்... விலை கிடு கிடு உயர்வு..!

உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலரும் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜா பூக்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லெட்டுகள் மற்றும் பரிசு பொருட்களை வாங்கி பிடித்தவர்களுக்கு பரிசளித்து மகிழ்வார்கள்.
இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட் போன்கள் மூலம் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக காதலர் தின வாழ்த்துகளை பரிமாறி கொண்டாலும், நேரில் சென்று ரோஜா பூக்கள், வாழ்த்து அட்டைகளை கொடுத்து வாழ்த்துவது தனித்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்களுக்கு மவுசு இருக்கும்.
இதற்கிடையில் வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக ரோஜா பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது.
பனிப்பொழிவு காரணமாக நீலகிரி, ஓசூரில் பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து குறைந்துள்ளது. இதனால், 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு தாஜ்மகால் ரோஜா-₹350 - ₹450, பிங்க் ரக ரோஜா ₹250 ₹400, ராக்ஸ்டார் ரோஜா- ₹200 ₹350, ரெட்ரோஸ்- ₹300 500, மற்ற கலர் ரோஸ்- ₹200 - ₹400 விற்பனையாகிறது