வைரமுத்து தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல்வர்..!

''கவிப்பேரரசு" என்று அழைக்கப்படும் வைரமுத்துவின் பாடல்கள் மற்றும் கவிதைகளுக்கு தனியாக ரசிகர்கள் உள்ளனர்.
கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் கடந்த மே 10-ம் தேதி காலமானார்.
அவரின் இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நடைபெற்றது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 17) பெசன்ட் நகரில் உள்ள வைரமுத்துவின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
ஏற்கனவே, முதலமைச்சர் தனது எக்ஸ் தளத்தில், அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.