திமுக எம்எல்ஏ நடத்திய வேல் யாத்திரை !
திமுக எம்எல்ஏ நடத்திய வேல் யாத்திரை !

வல்லக்கோட்டை அருள்மிகு முருகன் திருக்கோவிலுக்கு, தி.மு.க. எம்.எல்.ஏ., மோகன் வேல் யாத்திரை மேற்கொண்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் 6-ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் துவங்கிய இந்த வேல் யாத்திரை, டிசம்பர் 7 -ம் தேதி திருச்செந்துாரில் முடிகிறது.
இந்நிலையில், அண்ணாநகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., மோகன் தலைமையில், பகுதி செயலாளர் ராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், சென்னை அமைந்தகரையில் உள்ள அருள்மிகு கன்னியம்மன் கோவிலுக்கு சென்றனர்.
அங்கு வேலுக்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர். பின்னர், அங்கிருந்து அனைவரும், ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள, வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, வேல் யாத்திரை புறப்பட்டு சென்றனர்.
வேல் யாத்திரை குறித்து, மோகன் எம்எல்ஏ, கூறுகையில், வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, 33 -வது ஆண்டாக யாத்திரை செல்கிறேன். கடந்த 57 ஆண்டுகளாக சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கிறேன்.
வழக்கமாக 2 ஆயிரம் பேருக்கு அனுமதி கிடைக்கும். ஆனால் இப்பாது கொரோனா தொற்று பரவல் காரணமாக, 50 பேருக்கு தான் அனுமதி கிடைத்தது. வரும், 2021 -ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும். அதற்கான பிரார்த்தனை தான் இது என்றார்.
இந்த தகவல் அறிந்த திமுக தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்.