1. Home
  2. தமிழ்நாடு

வீடு திரும்பினார் வைகோ.. மதிமுக தொண்டர்கள் உற்சாகம்..!

1

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு 80 வயது ஆகிறது. வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து அவர் சற்று விலகியிருக்கிறார். இருந்தபோதிலும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரச்சாரங்களிலும் அவர் ஈடுபட்டார். முன்பை போல இயங்க முடியவில்லை என்பதால், தனது மகனான துரை வைகோவுக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுத்து, தீவிர அரசியலில் ஈடுபடுத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த மே 27-ம் தேதி தனது வீட்டில் கால் தவறி வைகோ கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடது கை தோள்பட்டையில் எலும்பு முறிந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எலும்பு முறிந்த இடத்தில் டைட்டானியம் பிளேட் பொருத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் அப்போல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று வைகோவிடம் நலம் விசாரித்தார். இந்நிலையில், வைகோவின் உடல்நிலை நன்றாக தேர்ச்சியடைந்தது. இதையடுத்து, அவர் இன்று மாலை (ஞாயிற்றுக்கிழமை) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 10 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் அவரை வைகோவை பார்க்க வர வேண்டாம் என மதிமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like