டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் வைகோ..!

தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பின் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீடு திரும்பினார். கடந்த 7 நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும், அடுத்த 10 நாட்களுக்கு வைகோவை கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்க வர வேண்டாம் என மதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.