வைகோ மருத்துவமனையில் அனுமதி..!
திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய வைகோ, அக்கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதி மீது ஏற்பட்ட கோபத்தால் 1992 ஆம் ஆண்டில் அக்கட்சியில் இருந்து விலகி மதிமுக என்ற கட்சியை தொடங்கினார். வைகோவின் அதிரடி பேச்சுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் திமுகவிற்கு போட்டியாக மதிமுக என்ற கட்சியை உருவாக்கிய நிலையில் வைகோ மீது கொண்ட அன்பால் திமுகவில் இருந்து ஏராளமான மூத்த நிர்வாகிகள் அக்கட்சியில் இணைந்தனர். இதனையடுத்து நடைபெற்ற தேர்தல்களில் சரியான முடிவு எடுக்க முடியாத காரணத்தால் பின்னடைவை வைகோ சந்தித்தார்.
அரசியல் கட்சியின் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை எதிர்பார்ப்பது தேர்தலை தான். ஆனால் ஒரு அரசியல் கட்சியாக இருந்து சட்டமன்ற தேர்தலையே புறக்கணிப்பதாக தவறான முடிவை எடுத்தார். இதனால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் திமுகவிடமே மீண்டும் சென்றனர். ஒரு கட்டத்தில் திமுகவிடமே கூட்டணியையும் வைகோ வைக்கும் நிலை உருவானது.
இந்நிலையில் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அறுவைசிகிச்சை செய்து, வலது கை தோள்பட்டையில் வைக்கப்பட்டிருக்கும் பிளேட்டை அகற்ற, இன்று காலை வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.