1. Home
  2. தமிழ்நாடு

கருணாநிதி நினைவிடத்தில் வடிவேலு.!

Q

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது உடல் சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அமைந்துள்ள வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததும் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட மெரினாவில் அவருக்கு நினைவிடம் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி தமிழக அரசு சார்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ 39 கோடியில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. சென்னை மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம், புதிதாக அமைக்கப்பட்ட கருணாநிதி நினைவிட திறப்பு நிகழ்ச்சி கடந்த திங்கள் கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு இந்த நினைவிடங்களை திறந்து வைக்கும் அடையாளமாக கல்வெட்டை திறந்துவைத்தார்.

முதல்வர் கருணாநிதி குறித்த அரிய புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், மற்றும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பார்த்து வியந்தனர். 

 இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில், நடிகர் வடிவேலு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

மேலும் சென்னை மெரினா கடற்கரையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தில் உள்ள 'கலைஞர் உலகம்' அருங்காட்சியகம் சென்று பார்வையிட்டார் நடிகர் வடிவேலு.

இன்று விடுமுறை என்பதால் ஏராளமான பொதுமக்கள் வந்ததால் அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.


 


 

Trending News

Latest News

You May Like