1. Home
  2. தமிழ்நாடு

கேப்டனை வந்து பார்க்காத வடிவேலு! இருவருக்கும் என்னதான் பிரச்சனை?

Q

நகைச்சுவை நடிகர் வடிவேலும், விஜயகாந்தும் மதுரையிலிருந்து வந்தவர்கள். இருவருமே சின்னகவுண்டர், தவசி, எங்கள் அண்ணா, வல்லரசு, நரசிம்மா ஆகிய படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். வடிவேலுவிற்கு சில படங்களில் நடிக்க அவர் வாய்ப்பு கேட்டு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது, 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, விஜயகாந்தை கடுமையாக தாக்கி பேசினார். வடிவுலே ஒற்றுமையாக இருந்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட சின்ன மனஸ்தாபம், திமுகவினரால் உபயோகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வடிவேலுவின் ஆரம்ப கட்ட சினிமா வாழ்வின்போது, உடன் இருந்த விஜயகாந்தையே இப்படி பேசிவிட்டாரே என ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

வடிவேலுவும், விஜயகாந்தும் நல்ல நட்புடன் பழகி வந்தனர். இவர்கள் இரவரின் வீடுகளும் சாலிகிராமத்தில் இருந்ததாகவும், அப்போது வடிவேலு தனது காரை விஜயகாந்த் வீட்டின் முன்பு நிறுத்தியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. மேலும், விஜயகாந்த் நடிகர் சங்கத்தலைவராக இருந்த போது, சங்க கூட்டத்திற்கு அழைத்தால் வடிவேலு வராமல் இருந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. வடிவேலு, தன்னை குறித்து ஒரு கட்சிக்காக இழிவாக பேசினாலும், அது குறித்து ஒரு நாளும் எந்த பத்திரிக்கையிலும் பேசாதவர் கேப்டன் விஜயகாந்த். ஆனால், கடைசிவரை கேப்படன் விஜயகாந்தை பார்க்க வரவில்லை நடிகர் வடிவேலு. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், வடிவேலு வந்தால் அவரை விஜயகாந்த் ரசிகர்கள் எதிர்ப்பார்கள் என்றும், அவர் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.

Trending News

Latest News

You May Like