1. Home
  2. தமிழ்நாடு

இன்று நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 100008 வடமலை அலங்காரம்..!

1

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் வரும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தி விழாவாக வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
 

இன்றைய தினம் 1,00,008 வடை மாலை சாத்தப்பட உள்ளது. அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஆஞ்சநேயருக்கு, காலை 11 மணிக்கு பால் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து மதியம் 1 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஆஞ்சநேயருக்கு மாலையாக சாத்தப்பட்ட 1,00,008 வடைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. அதன்படி 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணிக்கான வேலைகள் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த 35 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 ஆயிரத்து 50 கிலோ உளுந்து மாவு, 15 லிட்டர் அளவில் 40 டின் கொண்ட நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 125 கிலோ உப்பு ஆகியவற்றை கொண்டு வடை தயாரிக்கப்பட்டு வருகிறது. பகல், இரவு பாராமல் தொடங்கிய இந்த பணி வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவடையும் என்றும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெரிய வடையாக தயார் செய்யப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like