தடுப்பூசி அள்ளித்தெளிக்கும் வாக்குறுதி அல்ல…! கமல்ஹாசன் காட்டம்!

கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையிலும், ஆளுங்கட்சிகளும் அறிவித்துள்ள நிலையில் அதனை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பீகார் சட்டமனற் தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக தனது தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என தெரிவித்தது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார். அதே போல் மத்தியப்பிரதேசம், கர்நாடகா, புதுச்சேரி மாநில அரசுகள் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள். ஐயா ஆட்சியாளர்களே... தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து. அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல என தெரிவித்துள்ளார்.
நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 23, 2020
எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர்.
இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள்.
ஐயா ஆட்சியாளர்களே...
தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து.
அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல.
(1/2)
newstm.in