1. Home
  2. தமிழ்நாடு

தவெக கட்சியில் இணைந்த ‘வாழை’ பட நடிகர்..!

1

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'வாழை'. இந்தப் படத்தில், நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் பொன்வேல்.

சிவனணைந்தான் எனும் கதாபாத்திரத்தில் நடித்த பொன்வேல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 'சிவனணைந்தான்' கேரக்டர் தான் வாழை படத்தின் மையப் பாத்திரம். இந்த கேரக்டரில் இயக்குநர் மாரி செல்வராஜின் உறவினரான பொன்வேல் நடித்து கவனம் ஈர்த்திருந்தார்.

இந்நிலையில், பொன்வேல் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட தவெக நிர்வாகிகள் முன்னிலையில், அவர் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு கட்சிக் கொடி அணிவித்து தவெகவினர் வரவேற்றனர். தவெகவில் இணைந்த நடிகர் பொன்வேலை, அக்கட்சித் தொண்டர்கள் வரவேற்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

Trending News

Latest News

You May Like