1. Home
  2. தமிழ்நாடு

வாஸ்து படி தவறு..! இந்த செடிகள் மற்றும் மரங்களை மட்டும் வீட்டில் வளர்த்து விடாதீர்கள்...!!

1

வாஸ்து சாஸ்திரத்தின் கூற்றுப்படி, நமது வீட்டின் உட்புறத்திலும் சரி வீட்டை சுற்றியும் நடக்கூடாதாக சில செடிகள் மற்றும் மரங்கள் உள்ளன. ஏனெனில் வீட்டிற்குள் வைக்கப்படும் தவறான செடிகள் எதிர்மறை சக்திகளை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது. அவை சுற்றுப்புறத்தை சுற்றியுள்ள நச்சுத்தன்மையை அழிக்காது. அதுமட்டுமின்றி வீட்டினுள் தீய சக்தியை அழைத்து வருகிறது. எனவே உங்கள் வீட்டிற்கு சரியான தாவரத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது. அப்படியானால் எந்த மாதிரியான தாவரங்களை வீட்டில் வளர்க்கக்கூடாது என்பது குறித்து காண்போம் வாருங்கள்.

புளியமரம்: புளியமரம் புளிப்பு என்பதால் இந்த மரத்தை நட்டால், வீட்டிலுள்ள மகிழ்ச்சியும் புளிப்பாக மாறும் என்றும் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் நடப்படும் புளியமரத்தால் வீட்டின் முன்னேற்றம் தடைபடுகிறது. மேலும் அது குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இதனால் தான் வீட்டின் முன்பு புளியமரத்தை யாரும் நடுவதில்லை.

கள்ளிச்செடி: பலர் வீட்டின் உள்ளேயும் அலுவலக மேசைகளிலும் சிறிய கள்ளிச்செடிகளை வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அவற்றை வீட்டில் வளர்க்கக்கூடாது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கள்ளிச்செடி வீட்டில் மோசமான சக்தியை கடத்தும் என்று வாஸ்து மற்றும் ஃபெங் சுய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செடிகள் வீட்டில் துரதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறது. மேலும் கூர்மையான முட்கள் குடும்பத்திற்குள் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

பனை மரம்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, பனை மரங்களை ஒருபோதும் வீட்டில் நடக்கூடாது என்று சொல்லப்படுகிறது. பனை மரம் வளர்வதைத் தவிர்த்தால் வீட்டில் வறுமை வராது என்று கூறப்படுகிறது. மேலும், இந்த பனை மரத்தை வளர்க்கும் மக்கள் நிதி சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றனர். இது ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் வீட்டை சுற்றி இந்த மரத்தை நடாதீர்கள்.

போன்சாய் மரங்கள்: இதனை வீட்டிற்குள் வைத்து வளர்த்தால் நல்ல சக்திகளை ஈர்க்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவை நல்ல சக்திகளை பிரதிபலிக்காது. அவை மெதுவான வளர்ச்சியை பிரதிபலிப்பதாகும். இதனை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பது அவ்வளவு நல்லதல்ல. இதனை அலுவலக அறையின் தென்கிழக்கு அல்லது தெற்கு மூலையில் வைப்பது நல்லது. இருப்பினும் இந்த போன்சாய் மரங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை கண்டறிய உதவும் என்றும் கூறப்படுகிறது. உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருக்கும் போன்சாய் மரம் இறந்து விட்டால் அதே இடத்தில் மற்றோர் போன்சாய் மரத்தை வைக்கவும். அதுவும் இறந்து விட்டால் அந்த இடத்தில் நிச்சயம் எதிர்மறை சக்திகள் இருக்கிறது என்று அர்த்தம்.

மூங்கில் மரம்: மூங்கில் ஒரு கவர்ச்சியான மற்றும் வண்ணமயமான தாவரம் ஆகும். பல வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டைச் சுற்றி ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்க மூங்கிலை நடவு செய்கிறார்கள். ஆனால் வாஸ்து படி, வீட்டில் மூங்கில் மரங்களை வளர்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மரத்தை வீட்டில் நடவு செய்வதன் மூலம் அவை பல சிக்கல்களை கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அரச மரம்: கோயில்களில் அரச மரத்தைப் பார்த்திருக்கிறோம். வீட்டில் ஒரு அரச மரத்தை நட்டால் அது நல்ல சக்தியை கொடுக்க உதவும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இருப்பினும், வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு அரச மரத்தை ஒருபோதும் வீட்டில் நடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் வீட்டில் அரச மரம் இருந்தால், அதை எடுத்து ஏதேனும் ஒரு புனித இடம் அல்லது கோவிலில் நட்டு வைக்க வேண்டும். இது உங்கள் பணத்தை அழிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like