கொரோனா பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள உத்தரப்பிரதேசம்!!

உத்தரப் பிரதேசத்தை கொரோனா பாதித்த மாநிலமாக அறிவித்து அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதனை தடுக்கும் நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதித்து வருகின்றன.
மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இரவு நேர ஊரடங்கு விதிப்பது குறித்து வரும் 31ஆம் தேதி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தை கொரோனா பாதித்த மாநிலமாக அறிவித்து அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.
ஒமைக்ரான் பரவலால் அங்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, கொரோனா பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in