1. Home
  2. தமிழ்நாடு

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ரோடு ஷோ ரத்து..!

Q

எம்எல்ஏ கே.எஸ்.நவீன், செய்தியாளர்களிடம் கூறியதாவது, வரும் மக்களவை தேர்தலில், பாஜ வேட்பாளர் கோவிந்த் கார்ஜோளை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, சித்ரதுர்காவில் 24ம் தேதி நடைபெற இருந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அன்றைய தினமே மாநாடு நடைபெறும். முன்னதாக திட்டமிட்டபடி, காலையில் ரோடு ஷோ நடைபெற இருந்தது. சில காரணங்களால் பழைய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் மாநாட்டில் யோகி ஆதித்யநாத் பங்கேற்கிறார். மக்களவை தொகுதிகளை சேர்ந்த பாஜ மற்றும் மஜத தொண்டர்கள் இதில் பங்கேற்பார்கள். காங்கிரசின் உத்தரவாதத்தால் மாநிலம் திவாலாகிறது. தேர்தல் அறிக்கையில் அபிவிருத்தி பற்றி குறிப்பிடப்படவில்லை.

பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் தருவதாக கூறியுள்ளது. அதன்படி ஆண்டுக்கு ₹25 லட்சம் கோடி தேவைப்படுகிறது. ஒன்றிய அரசின் பட்ஜெட் அளவு ₹47 லட்சம் கோடி. இந்த எளிய உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.

Trending News

Latest News

You May Like