உஷார்!! முறையற்ற டயட்டால் இளம் நடிகை மரணம்!

உடல் எடையைக் குறைப்பது குறித்து உலகம் முழுவதும் பரவலாக பெரும்பாலோனோர் உடற்பயிற்சி, குறைந்தளவு உணவு உட்கொள்வது என்று பல வழிகளைப் பின்பற்றுகின்றனர். உலகளவில் அதிகமாக பின்பற்றப்படும் டயட்களில், உடல் எடையைக் குறைப்பதற்கு கீட்டோ டயட் என்கிற வகை முக்கிய இடத்தை வகிக்கிறது.
இந்த வகையில், உணவில் மிக மிகக் குறைந்த அளவிலான மாவுச் சத்துப் பொருட்களை மட்டுமே எடுத்துக் கொண்டு, அதிக அளவிலான கொழுப்புகள் நிறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்வது தான் கீட்டோ டயட்.
இந்நிலையில், பெங்களூருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுநீரக கோளாறு காரணமாக நடிகை மிஷ்டி முகர்ஜி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த டயட் காரணமாக அவரது சிறுநீரகங்கள் செயலிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிகிச்சைப் பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை, நடிகை மிஷ்டி முகர்ஜி மரணமடைந்தார். 27 வயதே நிரம்பிய நடிகை, உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் மரணமடைந்தது திரையுலகினரையும், இந்த டயட் வகைகளைப் பின்பற்றும் நடிகைகளையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.