1. Home
  2. தமிழ்நாடு

உஷார்!! பான், ஆதார் எண் தரலைன்னா 20 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்!

உஷார்!! பான், ஆதார் எண் தரலைன்னா 20 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்!


அலுவலகத்தில் வேலைப் பார்ப்பவர்கள் அனைவரும் தங்களது பான் கார்டு, ஆதார் எண் போன்ற தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி பான், ஆதார் தகவல்களை சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில், அவர்கள் 20 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்

மத்திய நேரடி வரி வாரியம் விதிப்படி, டி.டி.எஸ் (TDS) விலக்குக்காக, இந்த இரண்டு ஆவணங்களின் விவரங்களையும் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்கள், தங்களது நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எந்தவொரு ஊழியரும், பணிபுரியும் நிறுவனத்திற்கு தங்களது பான் எண்ணையும் ஆதார் எண்ணையும் கொடுக்கவில்லை என்றால், அவர் தனது வருமானத்திற்கு 20 சதவிகிதம் வரியாக செலுத்த வேண்டும்.

இந்த விதி சிபிடிடியின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி, வருமான வரிச் சட்டத்தின் 206 ஏஏ பிரிவில், ஊழியர் பெறும் வரிவிதிப்புத் தொகை குறித்து பான் மற்றும் ஆதார் விவரங்களை வழங்க வேண்டியது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி தராதவர்களின் சம்பளத்தில் இருந்து 20 சதவிகித வரியை நிறுவனங்கள் கழித்துக் கொள்ளலாம். அதே சமயம், ஊழியர் தரும் விவரங்கள் சரியானவையாக இருக்க வேண்டும். தவறான தகவல்களைத் தரும் ஊழியர்கள், மிக அதிகளவில் டிடிஸ் செலுத்த நேரிடும்.

Trending News

Latest News

You May Like