1. Home
  2. தமிழ்நாடு

உஷார்!! உங்க வண்டியோட நம்பர் ப்ளேட்டை செக் பண்ணுங்க... புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

உஷார்!! உங்க வண்டியோட நம்பர் ப்ளேட்டை செக் பண்ணுங்க... புதிய விதிமுறைகள் அறிவிப்பு!


தமிழகத்தில் தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் சரியான முறையில் வைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக எழுந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அதுகுறித்த புதிய விதிமுறைகளை சென்னை காவல் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி 70 சிசி திறன் கொண்ட இன்ஜின் கொண்ட இரு சக்கர வாகனங்கள் முன் நம்பர் பிளேட்டில் எழுத்து உயரம் குறைந்தது 15 மி.மீ, தடிமன் 1.2 மி.மீ, இடைவெளி 2.5 மி.மீ இருக்க வேண்டும். அதே நேரம் பின்னால் நம்பர் பிளேட்டின் எழுத்து உயரம் 35மி.மீ, தடிமன் 7மி.மீ, இடைவெளி 5மி.மீ கொண்டதாக இருக்க வேண்டும்.

ஆட்டோக்களில் எழுத்து உயரம் 40 மி.மீ, தடிமன் 7 மி.மீ, இடைவெளி 5 மி.மீ உடையதாகவும், இது தவிர 500 சிசிக்கும் குறைவாக உள்ள 3 சக்கர வாகனங்களில் எழுத்து உயரம் 35 மி.மீ, தடிமன் 7 மி.மீ, இடைவெளி 5மி.மீ உடையதாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்ற அனைத்து வாகனங்களிலும் எழுத்து உயரம் 65மி.மீ, தடிமன் 10 மி.மீ, இடைவெளி 10 மி.மீ அளவில் இருக்க வேண்டும்.

மேலும் தனிப்பட்ட உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் நம்பர் பிளேட் வெள்ளை நிறத்திலும், வர்த்தக வாகனங்களின் நம்பர் பிளேட் மஞ்சள் நிறத்திலும் இருப்பதோடு அவற்றில் எழுதப்பட வேண்டிய நம்பர் மற்றும் எழுத்துக்கள் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like