1. Home
  2. தமிழ்நாடு

உஷார்! இங்கெல்லாம் 2 நாட்கள் “ரெட் அலர்ட்”!!

உஷார்! இங்கெல்லாம் 2 நாட்கள் “ரெட் அலர்ட்”!!


சென்னை உள்பட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது.

இந்நிலையில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு நெல்லை தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஷார்! இங்கெல்லாம் 2 நாட்கள் “ரெட் அலர்ட்”!!

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும் பிற பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பிற பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

உஷார்! இங்கெல்லாம் 2 நாட்கள் “ரெட் அலர்ட்”!!

தொடர் மழை காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும், அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் 26, 27ஆம் தேதிகளில் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like