1. Home
  2. தமிழ்நாடு

உஷார்..!  சீக்கிரமே கொரோனா 2வது அலை வருகிறது! முதல்வர் எச்சரிக்கை!

உஷார்..!  சீக்கிரமே கொரோனா 2வது அலை வருகிறது! முதல்வர் எச்சரிக்கை!


இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 60 லட்சம் பேர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1லட்சம் பேர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது மகாராஷ்டிரா மட்டுமே. இங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 13 லட்சம் பேர்.

உஷார்..!  சீக்கிரமே கொரோனா 2வது அலை வருகிறது! முதல்வர் எச்சரிக்கை!

இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவைப் பொறுத்தவரை இது முதல் அலை மட்டுமே. அடுத்த இரண்டாவது அலை பரவல் விரைவில் துவங்கும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதன்படி 'அறிகுறி எதுவும் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இருப்பதாகவும், தற்போது இங்கிலாந்தில் இதுபோலவே பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளைப் பலரும் பின்பற்றத் தவறிவிட்டனர் என்றும் கட்டுப்பாடின்றி வீதியில் சுற்றி வருபவர்களால் நிச்சயம் இரண்டாவது அலை பரவும் அபாயம் ஏற்பட்டு வருவதாதகவும் தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like