1. Home
  2. தமிழ்நாடு

பயனர்கள் அதிர்ச்சி..! விரைவில் கணக்குகளை பிளாக் செய்யும் வசதி நீக்கப்படும் : எலான் மஸ்க்..!

1

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கி இருந்தார். வாங்கிய சில நாட்களிலேயே ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். மேலும் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். 

சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் ப்ளூ டிக் வசதியை பெற சந்தா கட்டணத்தை அறிவித்தார்.

அண்மையில் ட்விட்டர் தளத்தின் பெயரை ‘எக்ஸ்’ என மாற்றி இருந்தார்.

சந்தா கட்டணம் செலுத்திய கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாயில் ஒரு பகுதியை வழங்கும் விதமாக விளம்பர வருவாய் பகிர்வு திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தார்.

அந்த வகையில்,  இனி எக்ஸ் பயனர்கள் தங்களுக்கு பிடிக்காத பயனர்களின் கணக்குகளை ப்ளாக் செய்ய முடியாது. அவர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளை மட்டுமே மியூட் செய்ய இயலும். அவர்களது பதிவுகள் நமது டைம்லைனில் வருவதை தடுக்க இயலாது. இது எக்ஸ் பயனர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது எக்ஸ் தளத்தில் இருக்கும் ப்ளாக்கிங் வசதியின் மூலம் பயனர்களின் பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகள் இரண்டையுமே தடுக்க முடியும். இந்த வசதியை நீக்குவதால் ஆபாச தாக்குதல்களை தடுக்க முடியாமல் போய்விடும் என்று பயனர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். 

அதுமட்டுமின்றி, ப்ளாக்கிங் வசதியை நீக்குவது, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆகியவற்றின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மீறுவதாக அமையும். இதனால் எக்ஸ் செயலி இந்த இரண்டு தளங்களில் இருந்தும் நீக்கப்பட வாய்ப்பு உண்டு. 

என்ன நடக்க போகிறது பார்க்க நாம் காத்திருக்க தான் வேண்டும்..!

 

Trending News

Latest News

You May Like