1. Home
  2. தமிழ்நாடு

பயனாளர்கள் அதிர்ச்சி..! 75 லட்சம் தவறான வாட்ஸ் ஆப் கணக்குகளுக்கு தடை..!

1

வாட்ஸ் ஆப், இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 75 லட்சத்து 48 ஆயிரம் தவறான கணக்குகளை தடை செய்துள்ளது. இவற்றில் 19 லட்சத்து 19 ஆயிரம் கணக்குகளை பயனர்கள் புகார் தெரிவிப்பதற்கு முன்பாகவே தடை செய்துள்ளதாக வாட்ஸ் ஆப், தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 500 மில்லியன் பயனர்கள் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப்-க்கு கடந்த அக்டோபர் மாதத்தில் 9,063 புகார்கள் வரப்பெற்றுள்ளன. அவற்றில் 12 புகார்களுக்கு மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், புகாருக்குள்ளான கணக்குகளை முற்றிலுமாக தடை செய்வதற்கு பதிலாக, அவற்றுக்கு மாற்று தீர்வு வழங்கவும், ஏற்கெனவே தடை செய்யப்பட்ட கணக்குகளை மீண்டும் தொடங்கவும் என அந்தப் புகார்களுக்கு வாட்ஸ் ஆப் பதிலளித்துள்ளது.

பயனர்களிடமிருந்து வரப்பெறும் புகார்களுக்கு விரிவான விளக்கம் தருவது, புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வது, முறைகேடுகளை தடுப்பதற்கு ஆக்கபூர்வ வசதி ஆகியவற்றை கொண்டிருப்பதாக வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like