1. Home
  2. தமிழ்நாடு

இனி யூரியாவை, தொழிற்சாலைக்கு பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை..!

Q

யூரியாவை தொழிற்சாலைக்கு பயன்படுத்தினால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்துக்கு,யூரியா 2,576 டன், டி.ஏ.பி., 873 டன், பொட்டாஷ் 2,984 டன், காம்ப்ளக்ஸ் 4,084 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாய பயன்பாட்டுக்கான மானிய விலை யூரியாவை,தவறாக தொழிற்சாலை பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தினால், குறைந்தது 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருளின் மதிப்புக்கேற்ப அபராதமும் விதிக்கப்படும். தரமற்ற, போலியான உரங்களை விற்பனை செய்யக்கூடாது. விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like