1. Home
  2. தமிழ்நாடு

யூஸ் பண்ணிக்கோங்க மக்களே! வீட்டு கடன் வட்டியைக் குறைத்தது SBI..!

1

சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்த பிறகு பல்வேறு வங்கிகள் தங்கள் கடன் விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியும் தனது வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் ஏற்பட்ட சரிவால் சந்தையில் போட்டி அதிகரித்துள்ளது. வங்கிகள் தங்களுக்குள் போட்டி போட்டிக்கொண்டு வட்டி விகிதங்களைக் குறைத்து வருகின்றன


ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்த பிறகு, பல வங்கிகள் தங்கள் கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு முன்பு, ஜூன் 12ஆம் தேதியன்று பேங்க் ஆஃப் பரோடா வட்டி வட்டிக் குறைப்பை அறிவித்தது. இந்தப் போட்டியால் வாடிக்கையாளர்களுக்கு மலிவான விகிதத்தில் வீட்டுக் கடன்கள் கிடைக்கும். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் திருத்தப்பட்ட புதிய வட்டி விகிதங்களின்படி, வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 7.50 சதவீதம் முதல் 8.45 சதவீத்ம வரை இருக்கும். சிபில் மதிப்பெண் அடிப்படையில் இந்த வட்டி விகிதங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப மாறுபடும். குறிப்பாக, மேக்ஸ்கெயின் ஓடி திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன் வட்டி விகிதம் 7.75 சதவீதம் முதல் 8.70 சதவீதம் வரை வைக்கப்பட்டுள்ளது.


அதே நேரத்தில் டாப்-அப் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம் முதல் 10.50 சதவீதம் வரை இருக்கும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிவித்துள்ளது. இந்த வட்டி விகிதங்கள் அனைத்தும் ஜூன் 15 முதல் பொருந்தும் என்று அறிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி EBLR வட்டி விகிதத்தை 8.65 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது ஃபுளோட்டிங் விகித வீட்டுக் கடன்கள், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் கடன்கள் போன்றவற்றின் விகிதங்களைத் தீர்மானிக்கப் பயன்படுகிறது. இது புதிய வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டி விகிதங்களில் கடன்களைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இந்த வட்டி விகிதக் குறைப்பு, சொந்த வீடு வாங்க வேண்டும் என்று கனவு காணும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிம்மதியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றம் வாடிக்கையாளரின் கடன் மதிப்பெண், கடன் காலம் மற்றும் பிற நிபந்தனைகளைப் பொறுத்து இருக்கும். எனவே கடன் பெறுவதற்கு முன் சரியான ஆலோசனை தேவை.

Trending News

Latest News

You May Like