1. Home
  2. தமிழ்நாடு

ஹெட்ஃபோன் யூஸ் பண்றீங்களா… ஜாக்கிரதை! இதப்படிங்க!!

ஹெட்ஃபோன் யூஸ் பண்றீங்களா… ஜாக்கிரதை! இதப்படிங்க!!


ஹெட்ஃபோனுக்குள் பெரிய சிலந்தி இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்தில் வசிக்கும் ஆலி ஹர்ஸ்ட் என்பவர் ஹெட்ஃபோன் பயன்படுத்திய போது அவருக்கு காதில் ஏதோ கூசுவது போல் இருந்துள்ளது. ஹெட்ஃபோனை கழட்டி பார்த்த அதிர்ச்சி காத்திருந்தது. அதை வீடியோவாக எடுத்தும் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், அராக்னிட் என்ற ஒரு சிலந்தி வகை பூச்சி ஹெட்ஃபோன்களுக்கு உள்ளே இருந்தது. ஹெட்போனை வேகமாக அசைத்தும், தட்டியும் அதை வெளியேற்ற முயற்சிக்கிறார். இருப்பினும், சிலந்தி பூச்சி வெளியே வரவில்லை.

இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். சிலந்திகள் கடித்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும்.

அதுவே வேறு ஏதாவது பூச்சி இருந்து காதுக்குள் சென்றாலோ அல்லது காதில் கடித்தாலோ பெரும் ஆபத்து ஏற்படும். அதனால் ஷூ போன்றே, ஹெட்ஃபோனையும் நன்கு பரிசோதித்து பயன்படுத்துவது நல்லது.

newstm.in

Trending News

Latest News

You May Like