போட்டி தேர்வு எழுதுபவர்களே யூஸ் பண்ணிக்கோங்க!

போட்டித் தேர்வுக்களுக்கான ஒரு தனித்துவமான வலைதளம் ஒன்றை தமிழ்நாடு அரசு (Tamilnadu Government) தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ள மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் ஒரு கோடி பேர் இதுவரை பயனடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. TNPSC, SSC, IBPS, RRB, UPSC போன்ற தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் இந்த வலைதளம் மூலம் பயனடையலாம்.
மேலும், TNPSC, SSC, IBPS, RRB, UPSC போன்ற தேர்வுகளுக்கான பாடத்திட்டம், மென்பாடக்குறிப்புகள், காணொளி வகுப்புகள், ஒலிப்பாடக்குறிப்புகள், தமிழிலும் ஆங்கிலத்திலும் தினசரி நடப்பு நிகழ்வுகள், Mindmap உள்ளிட்டவை இந்த வலைதளத்தில் கிடைக்கும். மேலும், இவை அனைத்தையும் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவற்றை இலவசமாக பதிவிறக்கி தேர்வுகளுக்கு தயாராகலாம்.
https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். மேலும் இப்போதே இந்த வலைதளத்தில் பதிவு செய்து, உங்களது எதிர்கால கனவை நிறைவேற்ற உடனே தயாராகுங்கள். மேலும், இந்த தகவல்களை உங்களுக்கு தெரிந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு அனுப்புங்கள்.