இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர் வேன்ஸ்..!

அமெரிக்கா துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ், 40, பதவி ஏற்றதை தொடர்ந்து அவரது மனைவி உஷா வேன்ஸ் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி ஆகியுள்ளார். உஷா வேன்ஸ் பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.
ஜே.டி.வேன்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஏப்ரல் 21ம் தேதி இந்தியா வருகின்றனர். இருவரும் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர். இவர்கள் ஏப்ரல் 24ம் தேதி வரை இந்தியாவில் இருப்பார்கள்.
ஜே.டி.வேன்ஸ் உடன் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியும், அவரது மனைவியுமான உஷா வருகிறார். வேன்ஸ், உஷா தம்பதி ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ராவிற்கும் பயணம் செல்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.