அமெரிக்க அதிபர் 3ம் உலகப்போரை உருவாக்க பார்க்கிறார்: ரஷ்யா!
ரஷ்ய அமைச்சர் மரியா புட்டினா வைத்த குற்றச்சாட்டில், அதிபர் ஜோ பிடன் தனது உத்தரவு மூலம் 3ம் உலகப்போரை உருவாக்க பார்க்கிறார். அவரின் பேச்சு காரணமாக 3ம் உலகப்போருக்கான ஆபத்து அதிகரித்து உள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வந்த பின் இந்த நிலைமை சரியாகும் என்று நினைக்கிறேன். அவரின் ஆட்சிக்கு கீழ் இந்த பிரச்சனை சரியாகும் என்று நினைக்கிறேன். 3ம் உலகப்போருக்கான ஆபத்து அதிகரித்து உள்ளது. டிரம்ப் அந்த தவறை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன்.., என்று ரஷ்ய அமைச்சர் மரியா புட்டினா கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யா மீது பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் பிடன் அனுமதி அளித்துள்ளார். அவரின் இந்த முடிவை ரஷ்ய அதிபர் புடின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ரஷ்ய அதிபர் புடினின் விமர்சனத்தில், அமெரிக்காவின் இந்த முடிவிற்கு உடனடியாக பதிலடி தரப்படும். அமெரிக்காவின் இந்த முடிவு நாங்கள் நேட்டோவுடன் நேரடி போரில் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது, என்று கூறி உள்ளார். அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யா மீது பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கினால் நாங்கள் நேட்டோவுடன் நேரடி போரில் இருக்கிறோம் என்று அர்த்தம் என்று புடின் ஏற்கனேவே கூறி இருந்த நிலையில்தான் பிடன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் பிடனின் ஆட்சி காலம் இந்த மாதத்தோடு முடிகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் அமெரிக்க ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பிடன் அனுமதி வழங்கி உள்ளார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த வசதியாக இந்த உத்தரவை பிடன் பிறப்பித்துள்ளார். இத்தனை காலமாக.. நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. இதனால் ரஷ்யாவை கடுமையாக தாக்க முடியாமல் உக்ரைன் தவித்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் இனி நீண்ட தூரத்திற்கு செல்லும் ஏவுகணைகளை இனி பயன்படுத்தலாம் என்று பிடன் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு இது மிகப்பெரிய சிக்கலாக மாறி உள்ளது.
சமீபத்தில்தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் பேசி, உக்ரைனில் போரை நிறுத்த வேண்டும்.. இதற்கு மேல் போரை அதிகரிக்க கூடாது. தற்போது உள்ள நிலை தொடர வேண்டும் . அதோடு அமைதி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த போன்கால் சுமார் 15 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது. இரண்டு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று இவர் மத்தியசம் பேசி உள்ளார். டிரம்ப் மத்தியசம் பேசியதற்கு இடையே.. தற்போது பிடன் ரஷ்யாவை சீண்டும் விதமாக உக்ரைனுக்கு புதிய பவர் வழங்கி உள்ளார். நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பிடன் அனுமதி வழங்கி உள்ளார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த வசதியாக இந்த உத்தரவை பிடன் பிறப்பித்துள்ளார். இது ரஷ்யாவை மேலும் கோபத்திற்கு உள்ளாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.