1. Home
  2. தமிழ்நாடு

பிப்ரவரியில் பிரதமர் மோடி அமெரிக்கா வருகிறார் - டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு..!

Q

அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் கடந்த 20ல் பதவியேற்றார். இந்நிலையில், அவருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசினார். இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'நண்பர் டிரம்ப் உடன் பேசியதில் மகிழ்ச்சி. இரண்டாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்' என குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், இன்று (ஜன.,28) புளோரிடாவில் விமான நிலையத்தில், டொனால்டு டிரம்ப் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வரப் போகிறார். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like