1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அன்பு பரிசு..!

Q

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி டிரம்பை, வெள்ளை மாளிகையில் இன்று அதிகாலை சந்தித்து பேசினார். வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பிற்குப் பின், பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, வெள்ளை மாளிகையில் தனது முதல் பதவிக் காலத்தை விவரிக்கும்''Our Journey Together', என்ற புகைப்பட புத்தகத்தில் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பரிசு அளித்தார். அதில், 'மிஸ்டர் பிரதமர் மோடி, நீங்கள் சிறந்தவர்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் அதிபர் டிரம்ப் கூறியதாவது: இந்தியா பிரதமர் மோடியைப் பெற்றிருப்பது மிகுந்த மரியாதைக்குரியது. அவர் நீண்ட காலமாக எனக்கு ஒரு சிறந்த நண்பர். எங்களுக்கு இடையே ஒரு அற்புதமான உறவு உள்ளது. மேலும் எங்கள் 4 ஆண்டு காலத்தில் அந்த உறவை நாங்கள் தக்க வைத்துக் கொண்டோம், என்றார்.

Trending News

Latest News

You May Like