1. Home
  2. தமிழ்நாடு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : மீண்டும் சாம்பியன் பட்டம் வென்ற 22 வயதான ஓசாகா !

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : மீண்டும் சாம்பியன் பட்டம் வென்ற 22 வயதான ஓசாகா !


கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் அண்மையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் தொடங்கியது. இதில் போட்டிகள் அனல்பறந்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரங்கா - ஜப்பானை சேர்ந்த 22 வயதான நவோமி ஓசாகா மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் முதல் செட்டில் 1-6 என பின்தங்கியிருந்த நவோமி பின்னர் விஷ்வரூபம் எடுத்தார். முதல் செட்டை இழந்தப்போதும் அடுத்த இரண்டு செட்களிலும் 6-3, 6-3 என என்ற வெற்றிபெற்றார்.

இதன்மூலம் இரண்டாவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் நவோமி ஒசாகா. இந்திய மதிப்பில் சுமார் 22 கோடி ரூபாய் பரிசு தொகையாக பெற்றுள்ளார் நவோமி.

அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸை அசரங்கா வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தும் குறிப்பிடத்தக்கது. இதனால் இறுதி போட்டி எதிர்பார்த்தப்படியே பரபரப்பாக இருந்தது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சர்வதேச ரேங்கிங்கில் 27வது இடத்தில் உள்ள அசரங்காவை வீழ்த்தியுள்ளார் நவோமி. கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலும் ஒசாகா சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். 

newstm.in 

Trending News

Latest News

You May Like