1. Home
  2. தமிழ்நாடு

அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு..!

1

கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டாக்டர்களின் பரிந்துரை கடிதமின்றி இந்த மாத்திரை வழங்குபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. 

அமெரிக்காவில் கருக்கலைப்பை தூண்டும் மைபெப்ரிஸ்டோன் மற்றும் மிசோப்ரோஸ்டால் ஆகிய மாத்திரைகளால் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்பட்டன. இதனால் இந்த மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்த மசோதா லூசியானா மாகாண சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியதையடுத்து கவர்னர் ஜெப் லாண்ட்ரி அதற்கு ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் இந்த இரு மாத்திரைகளும் ஆபத்தான பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. எனவே டாக்டர்களின் பரிந்துரை கடிதமின்றி இந்த மாத்திரை வழங்குபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  

Trending News

Latest News

You May Like