யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய இறுதி முடிவுகள் இன்று (ஏப். 16) வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மொத்தம் 1,016 பேர் மத்திய அரசு குடிமைப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்..ஆதித்யா ஸ்ரீவத்ஸாவா அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்..
மக்களவைத் தோ்தலையொட்டி குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வை மே 26-ஆம் தேதியிலிருந்து ஜூன் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது