1. Home
  2. தமிழ்நாடு

UPSC தேர்வு அட்டவணை வெளியீடு..!

1

2024 ஆம் ஆண்டிற்கான தேர்வுகள் குறித்த அட்டவணையை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. 25 வகையான தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதில் பொறியியல் சேவை முதல்நிலை தேர்வு குறித்த அறிவிப்பு செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் தேர்வானது 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

அதே போல NDA & NA தேர்வு குறித்த அறிவிப்பு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த தேர்வானது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. சிவில் சர்விஸ் முதல்நிலை தேர்வுக்காண அறிவிப்பு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தேர்வானது 2025 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்திய வன சேவை முதல்நிலை தேர்வு குறித்த அறிவிப்பு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தேர்வானது 2025 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Trending News

Latest News

You May Like