விரைவில் தமிழகத்தில் UPS பென்ஷன் திட்டம்..!
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிடவில்லை என்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகும்பட்சத்தில் அதனை பின்பற்றி திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். முதலமைச்சரின் ஆலோசனையை பெற்று குழு அமைத்து திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தங்கம் தென்னரசு எடுத்துரைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் கிடைக்க வழிவகை ஏற்படும். ஓய்வுபெறும் போது கடைசி 12 மாதங்களில் பெற்ற சராசரி Basic Salaryஇல் 50% உறுதியாகக் கிடைக்கும். பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.