புதிய சாதனை படைத்த யுபிஐ பரிவர்த்தனை..!
கடந்த அக்டோபரில் இதுவரை இல்லாத அளவிற்கு யுபிஐ மூலம் ரூ.23.5 லட்சம் கோடி மதிப்புள்ள பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என தேசிய பணப்பரிவர்த்தனை ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. அதன்படி, கடந்த மாதம் 1,658 கோடி, பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பரிவர்த்தனைகள் எண்ணிக்கையின் அடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதத்தை விட 10 சதவீதம் அதிகம். பரிவர்த்தனைகள் மதிப்பின் அடிப்படையில் 14 சதவீதம் அதிகம் என தேசிய பணப்பரிவர்த்தனை ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தற்போது ஒரு பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.