ஏப்ரல் 1 முதல் செயலற்ற நிலையில் இருக்கும் மொபைல் எண்களின் யுபிஐ சேவைகள் நிறுத்தம்..!

யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் 90 நாள்கள்வரையில் செயலற்றதாக இருந்தால், அதன் யுபிஐ சேவைகள் செயலிழக்கச் செய்யப்படும் என்ற புதிய விதிமுறையை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் அறிவித்தது.
Also Read - கோவையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை..!
யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களில் அழைப்புகள், எஸ்எம்எஸ், இணையச் சேவைகளை, அவ்வப்போது பயன்படுத்துவதன் மூலம் இதனைத் தடுக்கலாம். நீண்ட காலம் செயல்பாட்டில் இல்லாத மொபைல் எண்களை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயலிழக்கச் செய்துவிடும். செயலிழக்கப்பட்ட எண்களை புதிய பயனர்களுக்கு வழங்குவதையும் பெரும்பாலும் வழக்கமாக சில நிறுவனங்கள் கொண்டுள்ளன.
இவ்வாறான செயல்பாட்டின்போது, ஒரே எண்ணை புதிய பயனர் வாங்கும்போது, அந்த எண்ணின் முந்தைய பயனரின் யுபிஐ செயல்பாடுகளும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, முந்தைய பயனரின் யுபிஐ இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளை தவறான நபர்கள் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.