1. Home
  2. தமிழ்நாடு

கிரிக்கெட் வரலற்றில் எவரும் எட்டமுடியாத சாதனை படைத்த 'யுனிவர்சல் பாஸ்' கிறிஸ் கெய்ல் !

கிரிக்கெட் வரலற்றில் எவரும் எட்டமுடியாத சாதனை படைத்த 'யுனிவர்சல் பாஸ்' கிறிஸ் கெய்ல் !


ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெய்ல் 8 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் எவரும் எட்டமுடியாத சாதனையைப் படைத்துள்ளர்.

அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 13ஆவது சீசன் 50ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில், ‘யுனிவர்சல் பாஸ்கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்தார். 63 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் விளாசி 99 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இப்போட்டியைச் சேர்ந்து மொத்தம் 409 டி20 போட்டிகளில் பங்கேற்ற கிறிஸ் கெயில் 1000 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கெய்ரன் பொல்லார்ட் உள்ளார். இவர் 524 போட்டிகளில் 690 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

3ஆவது இடத்தில் நியூசிலாந்து அணி முன்னாள் வீர் பிரன்டன் மெக்கலம் 370 போட்டிகளில் 485 சிக்ஸர்களுடன்

மேலும் டி-20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 10 பட்டியலில் இருக்கும் ஒரேயொரு இந்திய வீரர் ரோகித் சர்மா. 376 போட்டிகளில் 337 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி நேற்று ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like