1. Home
  2. தமிழ்நாடு

சொந்த கட்சியையே விமர்சித்த மத்திய அமைச்சர்! பாஜகவில் சலசலப்பு!!

சொந்த கட்சியையே விமர்சித்த மத்திய அமைச்சர்! பாஜகவில் சலசலப்பு!!


அரசின் கட்டமைப்பு சரியில்லாததால் திட்டங்கள் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது பா.. தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுமானம் சட்டம் மற்றும் நடுவர் மன்றம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் காணொளி மூலம் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார்.

இந்நிகழ்வில் பேசிய அவர், அரசின் திட்டங்களில் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இது பெரிய பிரச்னையாக இருக்கிறது. முடிவுகளை எடுப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுவதால் திட்டங்களுக்கான செலவும் அதிகரிக்க வழிவகுக்கிறது என தெரிவித்துள்ளார்.

சொந்த கட்சியையே விமர்சித்த மத்திய அமைச்சர்! பாஜகவில் சலசலப்பு!!

இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் கட்டுமானமும் ஒன்று. இதை நாம் அனைவரும் அறிவோம். நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு செய்வதில் கட்டுமானத்துறை இரண்டாவது இடத்தில் உள்ளது.

நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க மத்திய அரசு எப்போதும் முயற்சிகளை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் சொந்த கட்சி குறித்தே பேசியிருப்பது பாஜக தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த கட்சியையே விமர்சித்த மத்திய அமைச்சர்! பாஜகவில் சலசலப்பு!!

ஆனால் நிதின் கட்கரி சொந்த கட்சி என்றும் பாராமல் விமர்சிப்பது இது முதல்முறை அல்ல. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அவர் இப்படி வெளிப்படையாக கருத்தினை தெரிவித்திருக்கிறார்.

newstm.in

Trending News

Latest News

You May Like