1. Home
  2. தமிழ்நாடு

இன்று மத்திய அமைச்சர் தமிழக எம்.பி-க்கள் சந்திப்பு..! காவேரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா ?

1

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு வலியுறுத்தக்கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் டெல்லியில் இன்று சந்திக்க உள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்தை நேற்று மாலை 4 மணிக்கு அவரது அலுவலகத்தில் சந்திக்க அனுமதி வாங்கியிருந்தோம். பிரதமர் அலுவலகத்திலிருந்து அவருக்கு அவசர அழைப்பு வந்ததால் இன்று காலை 9 மணிக்கு அவரது இல்லத்தில் சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.

காவேரி ஒழுங்காற்று வாரியம் தமிழகத்திற்கு விநாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சொன்னது ஆறுதல் அளிக்கிறது. கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததால் தமிழகத்தில் பயிர்கள் வாடிவிட்டன. தமிழகத்திற்கு 360 டிஎம்சி தண்ணீர் வரவேண்டியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று வாரியம் முறையாக செயல்படுத்துகிறார்களா என்பதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். 

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like