இனி டிடி பொதிகைக்கு புது பெயர் : மத்திய அமைச்சர் எல்.முருகன் அறிவிப்பு..!

மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் எல்.முருகன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியார்களை சந்தித்து தமிழகத்தில் மத்திய தகவல் தொடர்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், முன்பு அனைவரும் தூர்தர்சன் எனப்படும் டிடி பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். தற்போது மீண்டும் டிடி பொதிகை தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளோம். ஜனவரி மாதம் 14 முதல் டிடி பொதிகை எனும் பெயரை, டிடி தமிழ் என மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மேலும் டிடி நிருபர்கள் அடுத்ததாக களத்தில் இறங்கி செய்தி சேகரிக்க உள்ளனர் எனவும் கூறினர்.