சென்னை வரும் மத்திய அமைச்சர்.. லிஸ்டில் உள்ள மூத்த தலைவர்கள்..!
மாநிலத் தலைவர்கள் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் பொறுப்பாளர்களை அகில இந்திய பாஜக தலைமை நியமனம் செய்திருக்கிறது. தமிழகத்தில் இன்று அல்லது நாளை புதிய மாவட்டத் தலைவர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக இருந்த கிஷன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கிஷன் ரெட்டி புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக வருகிற 17-ஆம் தேதி சென்னை வருகிறார் எனக் கூறப்பட்டுள்ளது.