1. Home
  2. தமிழ்நாடு

நாளை அமெரிக்கா செல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

1

அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் அழைப்பின் பேரில் அங்கு நாளை 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். 

இந்தப் பயணத்தின்போது ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டினை சந்திக்க உள்ளார். மேலும், தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபரின் உதவியாளர் ஜாக் சல்லிவனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம் இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருடனும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துரையாடுகிறார் 

Trending News

Latest News

You May Like