1. Home
  2. தமிழ்நாடு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை திடீர் ஒத்திவைப்பு..!

1

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, நாளை (டிச.27) தமிழகம் வர உள்ளார் என தகவல் வெளியானது. விமானம் மூலமாக டிச. 27ஆம் தேதி தில்லியிலிருந்து சென்னை வரும் அமித் ஷா, ஹெலிகாப்டர் மூலமாக திருவண்ணாமலை சென்று, டிச. 28 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தைத் திறந்துவைக்கிறார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், அவர் தமிழகம் வருகை தரும் வேளையில் விசிக சார்பில் அவரை கண்டித்து, சென்னை, வள்ளுவர்கோட்டம் அருகே ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் போராட்டத்துக்கு விசிக ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டம் அறிவித்திருந்தது.

இந்நிலையில்,  உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் அமித்ஷா தமிழகத்திற்கு வருவார் என்று பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Trending News

Latest News

You May Like