1. Home
  2. தமிழ்நாடு

இன்று தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

1

அமித்ஷா, இன்று (ஏப்.10) இரவு 7.05 மணிக்கு புதுடில்லியில் உள்ள வீட்டிலிருந்து புறப்பட்டு சாலைவழியாக பி.எஸ்.எப், இரவு 7.25 மணிக்கு விமான தளத்திற்கு வருகிறார். இரவு உணவுக்கு பின் இரவு 7.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, இரவு 10.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.

அதை தொடர்ந்து அவர்,அங்கிருந்து சாலை வழியாக இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு சென்னையில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு வந்து இரவு தங்குகிறார்.

நாளை வெள்ளிக்கிழமை(ஏப்.11) காலை 10 மணி முதல் மாலை 4.20 மணி வரை ஹோட்டல் கிரான்ட் சோழாவில் முக்கிய நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெறுகிறது.

அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக மாலை 4.40 மணிக்கு சென்னை, மயிலாப்பூரில் உள்ள தியாகராஜபுரம் வருகிறார்.அங்கிருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 6 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அதை தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு டில்லி புறப்படுகிறார்.

Trending News

Latest News

You May Like