1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் கோவை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

1

வரும் 25 ஆம் தேதி கோவை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள கோவை பாஜக புதிய அலுவலகத்தை பிப்ரவரி 26-ம் தேதி அவர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து அன்று மாலை ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தவிர பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற உள்ளதாகவும், 2026 தேர்தல் எதிர்கொள்வது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. நிகழ்ச்சிகள் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவை வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பிரம்மாண்ட முறையில் வரவேற்பு அளிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Trending News

Latest News

You May Like